< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
'விலைவாசி உயர்வால் தள்ளாடும் மக்களுக்கு உதவுங்கள்' - பிரதமர் மோடிக்கு ராகுல் வேண்டுகோள்
|21 Dec 2022 12:44 AM IST
விலைவாசி உயர்வால் தள்ளாடும் மக்களுக்கு உதவுமாறு பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்தார்.
புதுடெல்லி,
ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது தனது இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை நடத்தி வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
ராஜஸ்தானில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை ரூ.500 என்ற விலையில், அதுவும் மத்திய அரசின் விலையில் பாதிக்கும் கீழான விலையில் வழங்குவதாக காங்கிரஸ் அரசு மாபெரும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரதமர் அவர்களே, நண்பர்களுக்கு சாதகமாக செயல்படுவதை நிறுத்துங்கள். அதிகளவிலான விலைவாசி உயர்வினால் தள்ளாடும் மக்களுக்கு சேவை செய்யுங்கள் என்று அவர் கூறி உள்ளார்.