< Back
தேசிய செய்திகள்
சத்தீஸ்கரில் வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு: ஜன்னல் கண்ணாடி சேதம்
தேசிய செய்திகள்

சத்தீஸ்கரில் வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு: ஜன்னல் கண்ணாடி சேதம்

தினத்தந்தி
|
16 Dec 2022 6:31 AM IST

அடையாளம் தெரியாத நபர்கள் கல்லைக்கொண்டு ரெயிலை எறிந்ததில் ஒரு பெட்டி ஜன்னல் கண்ணாடி சேதமடைந்தது.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிதாக தொடங்கப்பட்ட நாக்பூர்-பிலாஸ்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று பிலாய் நகர் ரெயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் கல்லைக்கொண்டு ரெயிலை எறிந்ததில் ஒரு பெட்டி ஜன்னல் கண்ணாடி சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்