ஓடும் ரெயில் மீது கல் வீசி தாக்குதல் - பயணி காயம்
|ரெயிலின் மீது இளைஞர் ஒருவர் கல்லை வீசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது.
பாட்னா,
பீகார் மாநிலம் பாகல்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஜெய்நகருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது வெளிப்புறத்தில் இருந்து வாலிபர் ஒருவர் ஓடும் ரெயிலின் ஜன்னல் வழியாக கல் ஒன்றை வீசியுள்ளார். இதில், ரெயிலில் பயணம் செய்த பயணிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ரெயிலின் மீது இளைஞர் ஒருவர் கல்லை வீசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், கல்வீச்சால் பயணியின் மூக்கில் இருந்து ரத்தம் வடியும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.
இந்த குற்ற செயலில் ஈடுபட்ட இளைஞர் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கிழக்கு மத்திய ரெயில்வே நிர்வாகம், ரெயில் மீது கல் வீசி, சமூக விரோத செயலில் ஈடுபட்டவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், குற்றவாளியை அடையாளம் கண்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.