< Back
தேசிய செய்திகள்
லாபத்துடன் தொடங்கிய பங்கு சந்தைகள்; மருந்து துறை சரிவு
தேசிய செய்திகள்

லாபத்துடன் தொடங்கிய பங்கு சந்தைகள்; மருந்து துறை சரிவு

தினத்தந்தி
|
7 Nov 2022 10:11 AM IST

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 216 புள்ளிகள் உயர்வடைந்து 61,166 புள்ளிகளாக உள்ளது.



மும்பை,


மும்பை பங்கு சந்தையில் வாரத்தின் முதல் நாளான இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 216.39 புள்ளிகள் உயர்வடைந்து 61,166.75 புள்ளிகளாக உள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டில் பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், பவர் கிரிட், மாருதி சுசுகி உள்ளிட்டவை லாபத்துடன் காணப்பட்டன. எனினும், டைட்டன், மருந்து துறைகளான டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், சன் பார்மா ஆகியவையும் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிவை கண்டன.

இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 85.75 புள்ளிகள் உயர்ந்து 18,202.90 புள்ளிகளாக உள்ளது.

நிப்டியில் வங்கி துறை ஒப்பீட்டளவில் அதிக லாபத்துடன் காணப்பட்டது. பிற துறைகளான தானியங்கி, நிதி சேவைகள், ஐ.டி. உள்ளிட்ட துறைகளும் அடுத்தடுத்து லாப நோக்குடன் உயர்ந்து காணப்பட்டன. மருந்து துறை சற்று பலவீனம் அடைந்து பங்குகளின் மதிப்பு வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.

வர்த்தக தொடக்க நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிப்டி என நாட்டின் இரு பங்கு சந்தைகளின் குறியீடுகளும் உயர்ந்து, ஆசிய அளவில் லாபத்துடன் காணப்பட்டன.

மேலும் செய்திகள்