< Back
மத்திய பட்ஜெட் - 2023
பங்கு சந்தை நிலவரம்; சென்செக்ஸ் குறியீடு 450 புள்ளிகள் உயர்வு
மத்திய பட்ஜெட் - 2023

பங்கு சந்தை நிலவரம்; சென்செக்ஸ் குறியீடு 450 புள்ளிகள் உயர்வு

தினத்தந்தி
|
1 Feb 2023 10:25 AM IST

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 450 புள்ளிகள் உயர்ந்து 60,007 புள்ளிகளாக காணப்பட்டது.



மும்பை,


நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசுகிறார். இதனை முன்னிட்டு பங்கு வர்த்தகம் இன்று லாப நோக்கத்துடன் காணப்படுகிறது.

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 450 புள்ளிகள் வரை உயர்ந்து 60,007 புள்ளிகளாக இருந்தது.

இதில், வங்கி துறையானது லாபத்துடன் தொடங்கியது. இதன்படி, எஸ் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆகியவற்றின் பங்குகள் லாபத்துடன் தொடங்கின.

எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் கோடக் வங்கி ஆகியவையும் பங்கு வர்த்தகத்தில் 1 சதவீதத்திற்கும் கூடுலான லாபத்துடன் காணப்பட்டன.

கோல் இந்தியா, பவர் கிரிக் கார்ப்பரேசன் மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவையும் லாபத்துடன் காணப்பட்டன. எனினும், அதானி குழுமத்தின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 130 புள்ளிகள் வரை உயர்ந்து 17,792 புள்ளிகளாக இருந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்து ரூ.81.77 ஆக உள்ளது. இது நேற்று ரூ.81.92 என முடிவடைந்த மதிப்புடன் ஒப்பிடும்போது 0.18% அதிகம் ஆகும்.

மேலும் செய்திகள்