< Back
தேசிய செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: வேதாந்தா நிறுவனத்தின் மனு தள்ளுபடி- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: வேதாந்தா நிறுவனத்தின் மனு தள்ளுபடி- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
29 Feb 2024 5:03 PM IST

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை ஐகோர்ட்டு சிறப்பாக கையாண்டதாக சுப்ரீம் கோர்ட்டு பாராட்டியுள்ளது.

புதுடெல்லி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

விதிமீறல்கள் பல இருப்பதால்தான் அரசு மற்றும் ஐகோர்ட்டு உரிய முடிவு எடுத்துள்ளது என்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று என்றும் கூறிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தனர்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை ஐகோர்ட்டு சிறப்பாக கையாண்டதாக பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரித்ததில் வரம்பு மீறல் இருந்ததாக கருதவில்லை என்றும் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்