< Back
தேசிய செய்திகள்
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த திருமணம் செய்யாதீர்கள் - நாகாலாந்து மந்திரி கருத்து

Image Tweeted By @AlongImna

தேசிய செய்திகள்

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த திருமணம் செய்யாதீர்கள் - நாகாலாந்து மந்திரி கருத்து

தினத்தந்தி
|
11 July 2022 11:26 AM GMT

கண்கள் சிறிதாக இருப்பதால் நிகழ்ச்சிகளில் தூங்குவதற்கு வசதியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

கோஹிமா,

வடகிழக்கு இந்தியர்களின் கண்கள் குறித்து பேசி சமீபத்தில் இணையத்தில் பிரபலமானார் நாகாலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங். 'எங்கள் கண்கள் சிறிதாக இருப்பதால் நிகழ்ச்சிகளின் போது தூங்குவதற்கு வசதியாக இருக்கும்' என டெம்ஜென் இம்னா தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் உலக மக்கள் தொகை தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை ஒட்டி மக்கள் தொகை பெருக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என டெம்ஜென் இம்னா கருத்து தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உலக மக்கள்தொகை தினத்தையொட்டி, மக்கள்தொகைப் பெருக்கத்தின் பிரச்சினைகளில் விழிப்புணர்வோடு இருப்போம் அல்லது என்னைப் போல் சிங்கிளாக (Staysingle) இருங்கள். அப்போது நாம் ஒன்றாக ஒரு நிலையான எதிர்காலத்திற்கு பங்களிக்க முடியும். இன்றே 'சிங்கிள்' இயக்கத்தில் சேருங்கள் என தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்யாமல் இருங்கள் என்பதையே அவர் 'சிங்கிளாக இருங்கள்' என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்