< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஒடிசாவின் கட்டாக்கில் கூட்ட நெரிசல்: மகர் மேளாவில் ஒருவர் பலி, பலர் காயம்
|14 Jan 2023 10:27 PM IST
ஒடிசாவின் கட்டாக்கில் நடைபெற்ற மகர் மேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலியானதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
கட்டாக்,
ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் உள்ள அதாகரில் உள்ள மகாநதி ஆற்றில் நடைபெற்ற மகர் மேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒன்பது பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மகர மேளாவின் போது பாரம்பாவில் உள்ள 7 ஆம் நூற்றாண்டு பழமையான சிங்கநாத் கோயிலில் வழிபட சென்றபோது கூட்டநெரிசல் ஏற்பட்டதாகவும், நெரிசலின் போது ஒரு டஜன் சிறார்களுக்கு மேல் காயம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாரம்பா மருத்துவமனையின் டாக்டர் ரஞ்சன் குமார் பாரிக் கூறுகையில், "இந்த சம்பவத்தில் ஒருவர் இறந்தார், ஒன்பது பேர் காயமடைந்தனர், மூன்று பேர் கட்டாக்கில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்" என்று அவர் கூறினார்.