< Back
தேசிய செய்திகள்
ஸ்ரீநகர்: பயங்கரவாதிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு - ஒருவர் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

ஸ்ரீநகர்: பயங்கரவாதிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு - ஒருவர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
28 Jun 2023 4:43 AM IST

என்கவுன்ட்டர் வேட்டையில் அந்த பகுதியை சேர்ந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதும் துப்பாக்கி சத்தம் ஓய்ந்தது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் ஹூவ்ரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதால், இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது.

இறுதியில் இந்த என்கவுன்ட்டர் வேட்டையில் அந்த பகுதியை சேர்ந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதும் துப்பாக்கி சத்தம் ஓய்ந்தது. இந்த சண்டையில் போலீஸ்காரர் ஒருவரும் காயம் அடைந்தார். சம்பவ இடத்தில் இருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. அங்கு வேறு யாரேனும் பதுங்கியிருக்கிறார்களா என்று தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்தது.

மேலும் செய்திகள்