< Back
தேசிய செய்திகள்
இலங்கை பொருளாதார நெருக்கடி: இந்தியா வழங்கிய மருந்துகள் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்கு வினியோகம்
தேசிய செய்திகள்

இலங்கை பொருளாதார நெருக்கடி: இந்தியா வழங்கிய மருந்துகள் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்கு வினியோகம்

தினத்தந்தி
|
6 Jun 2022 1:31 AM IST

இலங்கைக்கு மருந்து பொருட்கள், மருத்துவ தளவாடங்கள் என மிகப்பெரிய உதவிகளை இந்தியா செய்து வருகிறது.

கொழும்பு,

பொருளாதார நெருக்கடியால் திணறி வரும் இலங்கைக்கு, எரிபொருட்கள், உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள், மருத்துவ தளவாடங்கள் என மிகப்பெரிய உதவிகளை இந்தியா செய்து வருகிறது.

இலங்கை ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைக்கு பயன்படுத்துவதற்காக மருந்துகள் மற்றும் மருத்துவ தளவாடங்கள் கடந்த வாரமும் அனுப்பி வைக்கப்பட்டது.

இவ்வாறு இந்தியா அனுப்பி வைத்த மருந்து பொருட்கள் நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது.

இது தொடர்பாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில், 'யாழ்ப்பாணம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு இந்தியா உதவி. 2 லாரிகளில் உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ தளவாடங்களை ஆஸ்பத்திரி இயக்குனர் நந்தகுமாரிடம், இந்திய தூதரக அதிகாரி ராகேஷ் நடராஜ் ஒப்படைத்தார்' என குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்