< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
எஸ்.ஆர்.பட்டீலுக்கு முதல்-மந்திரி ஆகும் தகுதி உள்ளது; வீரப்பமொய்லி பேச்சு
|31 July 2022 10:31 PM IST
எஸ்.ஆர்.பட்டீலுக்கு முதல்-மந்திரி ஆகும் தகுதி உள்ளது என்று வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக மேல்-சபை எதிர்க்கட்சி முன்னாள் தலைவர் எஸ்.ஆர்.பட்டீல் பிறந்த நாள் விழா பாகல்கோட்டையில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி கலந்து கொண்டு பேசியதாவது:-
எஸ்.ஆர்.பட்டீலுக்கு முதல்-மந்திரி ஆகும் தகுதி உள்ளது. அவர் முதல்-மந்திரி ஆனால் மிக சிறப்பான முறையில் செயல்படுவார் என்று எனது மனது சொல்கிறது. அவர் நேர்மையான, எளிமையான தலைவர். அவருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று நான் முன்பு ஒரு முறை சிபாரிசு செய்தேன். அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அவர் பல்வேறு பணிகளை செய்துள்ளார். மக்களுக்கு சேவைகளை ஆற்றியுள்ளார். அவர் ஒரு நல்ல அரசியல்வாதி.
இவ்வாறு வீரப்பமொய்லி கூறினார்.