< Back
தேசிய செய்திகள்
காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் அடைக்கப்பட்டுள்ள சிறையில் உளவு கேமரா, மொபைல் போன்கள் பறிமுதல்

Image Courtesy : @gpsinghips

தேசிய செய்திகள்

காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் அடைக்கப்பட்டுள்ள சிறையில் உளவு கேமரா, மொபைல் போன்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
17 Feb 2024 7:59 PM IST

ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

திஸ்பூர்,

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 'வாரீஸ் பஞ்சாப் டே' அமைப்பின் தலைவரும், காலிஸ்தான் பிரிவினைவாதியுமான அம்ரித்பால் சிங்கும், அவரது கூட்டாளிகளும் அசாம் மாநிலத்தில் உள்ள உயர் பாதுகாப்பு கொண்ட திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சிறையில் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சிறைக் காவலர்கள் சிறை வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது சிறைக்குள் இருந்து உளவு கேமரா, ஒரு ஸ்மார்ட்போன், ஒரு கீபேட் போன், புளூடூத் ஹெட்போன்கள், பென் டிரைவ், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களை சிறைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த பொருட்கள் சிறை வளாகத்திற்குள் வந்தது எப்படி என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்