< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இஸ்ரேலில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க சென்ற விமானத்தில் கோளாறு
|17 Oct 2023 1:23 AM IST
இஸ்ரேலில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.
புதுடெல்லி,
போர் நடந்து வரும் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்டு வர ஆபரேஷன் அஜய் என்ற பெயரில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக சிறப்பு விமானங்கள் அனுப்பி அவர்கள் மீட்டு வரப்படுகின்றனர்.
இந்தியர்களை மீட்பதற்காக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து டெல்அவிவ் சென்றது. இந்த விமானம் நேற்று நாடு திரும்ப திட்டமிட்டிருந்தது.
ஆனால் டெல்அவிவ் சென்றபோது இந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அந்த விமானம் ஜோர்டானுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு விமானத்தின் கோளாறு சரி செய்யப்பட்ட பின் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.