< Back
தேசிய செய்திகள்
ஈச்ச மரத்தில் உருவான விநாயகருக்கு சிறப்பு வழிபாடு
தேசிய செய்திகள்

ஈச்ச மரத்தில் உருவான விநாயகருக்கு சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
26 Jun 2022 4:34 AM IST

சிக்கமகளூருவில் ஈச்ச மரத்தில் உருவான விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

சிக்கமகளூரு:

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு டவுனில் பைபாஸ் ரோட்டில் படகி மைதானத்தில் 2 ஈச்ச மரங்கள் உள்ளன. இதில் ஒரு மரத்தின் அடிப்பகுதியில் விநாயகர் உருவம் போல் வளர்ந்துள்ளது. அதாவது பெரிய காதுகள், தும்பிக்கை என விநாயகரின் உருவம் போல் தத்ரூபமாக காட்சி அளிக்கிறது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த ஈச்ச மரத்தில் உள்ள விநாயகர் உருவத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து அருகம்புல் சாத்தி சிறப்பு பூஜை வழிபாடு நடத்தி வருகிறார்கள். இந்த விநாயகர் பற்றி அறிந்த சுற்றுவட்டார பகுதிகள் தினமும் அங்கு வந்து சிறப்பு அபிஷேகம், பூஜை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்