< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை
|5 Sept 2023 7:34 PM IST
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
டெல்லியில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர், சசி தரூர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், இந்தியா என்ற பெயரை பாரதம் என்று மாற்றுவது உள்ளிட்ட மத்திய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.