< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு
|19 Sept 2023 2:42 PM IST
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அவை கூடியதும், மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய சட்டத்துறை மந்திரி தாக்கல் செய்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. சிறப்பு கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. சிறப்பு கூட்டத்தொடர் நேற்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. நேற்றைய கூட்டத்தொடரில் நாடாளுமன்ற பழைய கட்டிடம் நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆற்றியுள்ள பங்களிப்பு குறித்து எம்.பி.க்கள் தங்கள் நினைவுகளை பகிர்ந்தனர்.
கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று அவை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூடியது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அவை கூடியதும், மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய சட்டத்துறை மந்திரி தாக்கல் செய்தார். தொடர்ந்து அவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாளைய தினம் மசோதா மீது விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது.