< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் இருந்து பிற நகரங்களுக்கு 1,200 சிறப்பு பஸ்கள்
தேசிய செய்திகள்

பெங்களூருவில் இருந்து பிற நகரங்களுக்கு 1,200 சிறப்பு பஸ்கள்

தினத்தந்தி
|
12 Sept 2023 3:32 AM IST

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் பெங்களூருவில் இருந்து 1,200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் பெங்களூருவில் இருந்து 1,200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தாவணகெரே-உப்பள்ளி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 1,200 சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து தர்மஸ்தலா, குக்கே சுப்பிரமணியா, சிவமொக்கா, ஹாசன், மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஒரநாடு, தாவணகெரே, உப்பள்ளி, தார்வார், பெலகாவி, விஜயாப்புரா, கோகர்ணா, சிர்சி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் வருகிற 15, 16-ந் தேதிகளில் இயக்கப்படும்.

மைசூரு ரோட்டில் உள்ள கெங்கேரி பஸ் நிலையத்தில் இருந்து மைசூரு, உன்சூர், பிரியப்பட்டணா, விராஜ்பேட்டை, குசால்நகர், மடிக்கேரி உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். தமிழ்நாட்டின் மதுரை, கும்பகோணம், சென்னை, கோவை, திருச்சி மற்றும் கேரளாவின் பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோழிக்கோடு, உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் சாந்திநகரில் இருந்து இயக்கப்படும்.

ஆன்லைனில் முன்பதிவு

இந்த சிறப்பு பஸ்களில் பயணிக்க விரும்பும் பொதுமக்கள் இருக்கைகளை முன்கூட்டியே ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். புறப்பாடு மற்றும் வருகை ஆகிய இரண்டுக்கும் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்தால், பயண கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். அதே போல் பண்டிகை முடிவடைந்து பெங்களூரு வர விரும்புவோருக்கு வசதியாக 18-ந் தேதி மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இருந்து பெங்களூருவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்