சவுரவ் கங்குலியின் ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள செல்போன் திருட்டு
|சவுரவ் கங்குலி வீட்டில் இருந்த செல்போனை யாரோ திருடி விட்டார்கள் என்பதனால் அவர் தாகூர்புகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கொல்கத்தா,
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வீட்டில் இருந்து ரூ.1.60 லட்சம் மதிப்பிலான செல்போன் திருடு போனதாக அவர் போலீசில் அளித்துள்ள புகார் குறித்த தகவல் தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்து வெளியான தகவலின் படி,
சவுரவ் கங்குலி வீட்டில் இருந்த செல்போனை யாரோ திருடி விட்டார்கள் என்பதனால் அவர் தாகூர்புகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அதில் முக்கிய தகவல்கள் இருப்பதினால் அந்த செல்போன் தனக்கு தேவை என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அடுத்து கங்குலி கூறியதாவது, என்னுடைய வீட்டில் இருந்து போன் திருடப்பட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் வீட்டில் அனைத்து இடங்களிலும் நான் தேடிப் பார்த்தும் என்னுடைய செல்போனை கண்டுபிடிக்க முடியவில்லை. அதில் பலருடைய போன் நம்பரும் என்னுடைய தனிப்பட்ட டேட்டாவும் இருக்கின்றன.
அதேபோன்று பல அக்கவுண்ட்டுகள் அந்த செல்போனில் உள்ளதால் அந்த போன் எனக்கு மிகவும் அவசியமான ஒன்று எனவே அதனை கண்டுபிடித்து தருமாறு போலீசாரிடம் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.