விரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரம் - ஹிண்டன்பர்க் அறிவிப்பு
|அதானி குழும பங்குகள் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பேசு பொருளாகியுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி,
அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தது.
இந்த விவகாரம் இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் பற்றி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி, கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர். இதனால், தொடர்ந்து அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், விரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்த போவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆய்வறிக்கை வெளியிட்ட நிலையில் ஹிண்டன்பர்க் அடுத்த புதிய அறிக்கை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
New report soon—another big one.
— Hindenburg Research (@HindenburgRes) March 22, 2023