< Back
தேசிய செய்திகள்
ராகுலை பிரதமர் ஆக்குவது தான் சோனியாவின் ஒரே குறிக்கோள்: அமித்ஷா குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

ராகுலை பிரதமர் ஆக்குவது தான் சோனியாவின் ஒரே குறிக்கோள்: அமித்ஷா குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
9 March 2024 4:43 PM IST

காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர்கள் எப்போதும் தங்கள் குடும்பங்களின் நலனுக்காக உழைக்கின்றனர் என உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டினார்.

பாட்னா,

பீகார் மாநிலம் பாட்னாவின் பாலிகஞ்ச் பகுதியில் பா.ஜனதா கட்சியின் பேரணி நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும் போது கூறியதாவது:-

காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர்கள் எப்போதும் தங்கள் குடும்பங்களின் நலனுக்காக உழைக்கின்றனர், ஆனால் ஏழைகளுக்காக எதையும் செய்யவில்லை . ஏழைகளுக்கு நல்லது செய்ய பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதாவால் மட்டுமே முடியும் .

"காங்கிரசின் உயர்மட்டத் தலைவர்கள் எப்போதும் தங்கள் குடும்பங்களை கவனித்துக்கொள்கிறார்கள், லாலுவும் தனது முழு வாழ்க்கையையும் தனது குடும்பத்திற்காகவே வாழ்ந்தார். சோனியா காந்தியின் ஒரே குறிக்கோள் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும், அதே நேரத்தில் தனது மகனை முதலமைச்சராக்க வேண்டும் என்பதே லாலுவின் நோக்கம்." நரேந்திர மோடியாலும், பா.ஜனதாவாலும் மட்டுமே ஏழைகளுக்கு நல்லது செய்ய முடியும் .

காங்கிரசும் ஆர்.ஜே.டி.யும் நீண்ட காலம் ஆட்சியில் இருந்தாலும், மூத்த தலைவர் கர்பூரி தாக்கூருக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை . கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா வழங்கியவர் பிரதமர் மோடி. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

மேலும் செய்திகள்