< Back
தேசிய செய்திகள்
சோனியாஜி 20 முறை ராகுலை முன்னிறுத்தினார்; ஆனால் அந்த வாகனம்... காங்கிரசை சாடிய அமித்ஷா
தேசிய செய்திகள்

சோனியாஜி 20 முறை ராகுலை முன்னிறுத்தினார்; ஆனால் அந்த வாகனம்... காங்கிரசை சாடிய அமித்ஷா

தினத்தந்தி
|
22 Nov 2023 7:39 PM IST

பிரதமர் மோடியால், நாட்டின் பொருளாதாரம் உலகளவில், 11-ம் இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்று அமித்ஷா பிரசாரத்தில் குறிப்பிட்டார்.

சஞ்சோர்,

ராஜஸ்தானில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ராணிவாரா பகுதியில் நடந்த தேர்தல் பேரணியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறும்போது, மோடிஜி சந்திரயானை அனுப்பினார். சோனியாஜி அவருடைய மகனை முன்னிறுத்த விரும்பினார். ராகுல்ஜியை 20 முறை அனுப்பினார். ஆனால், அந்த வாகனத்தின் பயணம் தொடங்கக்கூட இல்லை என்று கூறினார்.

பிரதமர் மோடியால், நாட்டின் பொருளாதாரம் உலகளவில், 11-ம் இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ, அவருடைய மகன் ராகுல் காந்தியை அரசியலில் திரும்பவும் முன்னிறுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பம் சார்ந்த கட்சி. கெலாட்ஜி, அவருடைய மகனை முதல்-மந்திரியாக ஆக்க விரும்புகிறார். சோனியாஜி, அவருடைய மகனை பிரதமராக்க விரும்புகிறார். ஆனால், மோடிஜி, உங்கள் அனைவரையும் பற்றி சிந்தித்து கொண்டிருக்கிறார். மோடிஜி மட்டுமே உங்களை நினைக்கிறார் என்று பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்