< Back
தேசிய செய்திகள்
சோனியாவுடன் ஸ்மிரிதி இரானி மோதியதில் மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்
தேசிய செய்திகள்

சோனியாவுடன் ஸ்மிரிதி இரானி மோதியதில் 'மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்' காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

தினத்தந்தி
|
29 July 2022 10:29 PM IST

சோனியாவுடன் ஸ்மிரிதி இரானி மோதியதற்காக மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் எழுப்பி உள்ளது.

புதுடெல்லி, ‌

ஜனாதிபதி பற்றி மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறிய சர்ச்சை வார்த்தை பிரச்சினையில், சோனியாவுக்கும், மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த பிரச்சினையில், ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது பா.ஜ.க.வின் கோரிக்கையாக உள்ளது.

இப்போது சோனியாவுடன் ஸ்மிரிதி இரானி மோதியதற்காக மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் எழுப்பி உள்ளது.

இதை வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த பிரச்சினையில், ஸ்மிரிதி இரானிக்கு எதிராக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. இந்த விவகாரத்தை உரிமைக்குழுவிடம் விடுமாறும் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்