< Back
தேசிய செய்திகள்
கர்நாடகத்தில் சோனியா காந்தி போட்டியா? டி.கே.சிவகுமார் பதில்
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் சோனியா காந்தி போட்டியா? டி.கே.சிவகுமார் பதில்

தினத்தந்தி
|
30 Jan 2024 2:37 PM IST

மக்களவை தேர்தலில் சோனியா காந்தி கர்நாடக மாநிலத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

பெங்களூரு,

2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதனிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இந்நிலையில் இந்த தகவலை கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மறுத்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது என்று தெரிவித்துள்ள அவர், அத்தகைய விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார். முன்னதாக சோனியா காந்தி கடந்த 1999 மக்களவை தேர்தலில் கர்நாடகாவின் பல்லாரி தொகுதியில் பா.ஜ.க. மூத்த தலைவர் மறைந்த சுஷ்மா சுவராஜை தோற்கடித்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்