< Back
தேசிய செய்திகள்
சோனியா காந்தி பிறந்தநாள்; தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்
தேசிய செய்திகள்

சோனியா காந்தி பிறந்தநாள்; தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்

தினத்தந்தி
|
9 Dec 2023 11:46 AM IST

சோனியா காந்திக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஐதராபாத்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் இன்று விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஐதராபாத்தில் சோனியா காந்தியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர். தெலுங்கானாவில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்