< Back
தேசிய செய்திகள்
சோனாலி போகத்தின் மரணம் திட்டமிட்ட கொலை; சிபிஐ விசாரணை வேண்டும் - சோனாலி போகத்தின் மகள் வேண்டுகோள்!
தேசிய செய்திகள்

சோனாலி போகத்தின் மரணம் திட்டமிட்ட கொலை; சிபிஐ விசாரணை வேண்டும் - சோனாலி போகத்தின் மகள் வேண்டுகோள்!

தினத்தந்தி
|
30 Aug 2022 7:37 PM IST

தற்போதைய விசாரணையில் திருப்தி இல்லாததால் சிபிஐ விசாரணையை கோருகிறேன் என்று அவர் கூறினார்.

சண்டிகர்,

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், பா,ஜனதா மகளிரணி நிர்வாகியுமான சோனாலி போகத் (42) கோவாவில் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அவரது உதவியாளர்கள் இருவரை கைது செய்தனர். சோனாலி அதிகளவு போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்து உள்ளது. இந்த மரணம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சோனாலி மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் அவரது குடும்பத்தினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோனாலி போகத்தின் மகள் யசோதரா போகத் கூறியதாவது:-

"தற்போதைய விசாரணையில் திருப்தி இல்லாததால் சிபிஐ விசாரணையை கோருகிறேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இது என் அம்மாவுக்கு கிடக்க வேண்டிய நீதி, நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

நீதி கிடைக்கும் என்று அரியானா முதல் மந்திரி கூறினார்.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கோவாவில் கிட்டத்தட்ட ஒரு வாரம் ஷூட்டிங் இருக்கும் என்று அம்மா சொன்னார். ஆனால் இரண்டு நாட்களுக்கு மட்டுமே ரிசார்ட் முன்பதிவு செய்யப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆகவே இது திட்டமிட்ட கொலை என்று தெரிகிறது" என்று அவர் கூறினார்.

சோனாலியின் மரணம் பற்றிய ரகசிய அறிக்கை அரியானா காவல்துறை தலைமை இயக்குநருக்கு அனுப்பப்பட்டது. கோவா டிஜிபி ஜஸ்பால் சிங், இந்த வழக்கு தொடர்பாக கோவா முதல் மந்திரி சாவந்திடம் ஐந்து பக்க அறிக்கையை அளித்திருந்தார்.தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்