< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இந்தியா வளர்வதை சில சக்திகள் விரும்புவதில்லை - மோகன் பகவத்
|10 Sept 2024 5:37 AM IST
இந்தியா வளர்வதை சில சக்திகள் விரும்புவதில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டிய் மாநிலம் புனேவில் பிரபல எழுத்தாளர் மிலிண்ட் எழுதிய புத்த வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார்.
விழா நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது,
இந்தியா வளர்வதை சில சக்திகள் விரும்புவதில்லை. நாட்டின் வளர்ச்சிப்பாதையில் இந்த சக்திகள் தடைகளை உருவாக்குகின்றன. ஆனால், அதைப்பற்றி பயப்பட தேவையில்லை. மகாராஜா சதிரபதி சிவாஜி காலத்திலும் இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், அது தன்மத்தின் மூலம் முறியடிக்கபட்டது' என்றார்.