< Back
தேசிய செய்திகள்
பயங்கரவாதத்திற்கு பா.ஜ.க.வில் இதுவரை ஒருவரும் உயிரை இழக்கவில்லை; கர்நாடக முதல்-மந்திரி பரபரப்பு பேச்சு
தேசிய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு பா.ஜ.க.வில் இதுவரை ஒருவரும் உயிரை இழக்கவில்லை; கர்நாடக முதல்-மந்திரி பரபரப்பு பேச்சு

தினத்தந்தி
|
21 May 2023 2:27 PM IST

பயங்கரவாதத்திற்கு பா.ஜ.க.வில் இதுவரை ஒருவரும் உயிரை இழக்கவில்லை என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பேசி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

பெங்களூரு,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினத்தில், பெங்களூருவில் உள்ள கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் அவரது உருவ படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் கர்நாடக முதல்-மந்திரியான சித்தராமையா, துணை முதல்-மந்திரி மற்றும் கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான டி.கே. சிவக்குமார் உருவ படத்திற்கு இன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதன்பின் முதல்-மந்திரி சித்தராமையா கூட்டத்தில் கட்சியினர் முன் பேசும்போது, பயங்கரவாதம் பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். ஆனால், பயங்கரவாதத்திற்கு பா.ஜ.க.வில் இதுவரை ஒருவரும் உயிரை இழக்கவில்லை.

நாங்கள் பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று பா.ஜ.க. தொடர்ந்து கூறி கொண்டிருக்கிறது. ஆனால், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி போன்ற பல காங்கிரஸ் தலைவர்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு உயிரிழந்து உள்ளனர் என பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்