< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அமர்நாத்தை மிரட்டும் பனி...சிக்கிய 6 ஆயிரம் பக்தர்கள்
|9 July 2023 9:50 AM IST
தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சாலைகளால், அமர்நாத் புனித யாத்திரை இரண்டாவது நாளாக தடைபட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர், ராம்பன் மாவட்டத்தில் தொடரும் பனிப்பொழிவு மற்றும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சாலைகளால், அமர்நாத் புனித யாத்திரை இரண்டாவது நாளாக தடைபட்டுள்ளது.
இதனால், யாத்திரைக்குச் சென்ற சுமார் 6 ஆயிரம் பக்தர்கள், நிவாஸ் சந்திரகோட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சாலைகளை சீரமைக்க இன்றைய தினம் வாய்ப்பில்லை எனவும், அமர்நாத் குகை கோயிலில் தரிசனம் மேற்கொள்ள இன்னும் இரண்டு தினங்கள் ஆகலாம் எனவும் கூறப்படுகிறது.