< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
'ஷூ'வுக்குள் பதுங்கி இருந்த நாகப்பாம்பு
|16 Sept 2023 3:30 AM IST
குஷால்நகரில் ‘ஷூ’வுக்குள் பதுங்கி இருந்த நாகப்பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
குடகு:
குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகா நெல்லுதுகேரி கிராமத்தை சேர்ந்தவர் ஷாலி. இவர் தனது வீட்டுக்கு வெளியே செருப்பு, ஷூ ஆகியவற்றை வைக்க அலமாரி ஒன்றை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அலமாரியில் இருந்த ஷூவை ஷாலி எடுத்தார். அப்போது ஷூவுக்குள் ஏதோ இருப்பதை உணர்ந்த அவர், உள்ளே பார்த்துள்ளார். அப்போது ஷூவுக்குள் நாகப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக பாம்புபிடி வீரர் சுரேசுக்கு அவர் தகவல் அளித்தார். அதன்பேரில் பாம்புபிடி வீரர் சுரேஷ், அங்கு விரைந்து வந்து ஷூவுக்குள் பதுங்கி இருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அதனை வனப்பகுதிக்குள் கொண்டு விட்டார். அதன்பிறகு தான் ஷாலி மற்றும் அவரது குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.