< Back
தேசிய செய்திகள்
மும்பை விமான நிலையத்தில் ரூ.2.49 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
தேசிய செய்திகள்

மும்பை விமான நிலையத்தில் ரூ.2.49 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

தினத்தந்தி
|
24 Feb 2024 2:36 PM IST

மொத்தம் 4.56 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 12 வெவ்வேறு வழக்குகளில் மொத்தம் 4.56 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.2.49 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விமான நிலைய ஆணையகம் வெளியிட்ட தகவலின்படி, பயணிகள் சிலர் கடத்தல் தங்கத்தை தங்கள் உடைகள், பைகள் மற்றும் உடமைகளுக்கு இடையில் மறைத்து கடத்தி வந்ததாகவும், சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 22-ந்தேதி மும்பை விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான 8 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்