< Back
தேசிய செய்திகள்
கேரளாவின் கரிப்பூர் விமான நிலையத்தில் ரூ.1.36 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் - 3 பேர் கைது
தேசிய செய்திகள்

கேரளாவின் கரிப்பூர் விமான நிலையத்தில் ரூ.1.36 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் - 3 பேர் கைது

தினத்தந்தி
|
20 Sept 2022 10:33 PM IST

கரிப்பூர் விமான நிலையத்தில் ரூ.1.36 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் உள்ள கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில், சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3.06 கிலோ மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ஒரே நாளில் 3 வெவ்வேறு சம்பவங்களில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.1.36 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்