< Back
தேசிய செய்திகள்
ஆந்திராவில் செல்லும்போது பெங்களூரு-ஹவுரா ரெயிலில் தீ விபத்தா? - ரெயில்வே மறுப்பு
தேசிய செய்திகள்

ஆந்திராவில் செல்லும்போது பெங்களூரு-ஹவுரா ரெயிலில் தீ விபத்தா? - ரெயில்வே மறுப்பு

தினத்தந்தி
|
28 Nov 2022 2:30 AM IST

ஆந்திராவில் செல்லும்போது பெங்களூரு-ஹவுரா ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்திற்கு ரெயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.

சித்தூர்,

பெங்களூரு-ஹவுரா துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று பகல் 1 மணியளவில் ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் குப்பம் ரெயில் நிலையத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த ரெயில் திடீரென நிறுத்தப்பட்டது. ரெயிலில் தீ பிடித்ததாக தகவல் பரவியது. இது சில ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது.

ஆனால் இந்த செய்தியை ரெயில்வே மறுத்து உள்ளது. அதேநேரம் இந்த சம்பவத்துக்கு விளக்கம் அளித்து உள்ளது.

அதாவது குப்பம் ரெயில் நிலையத்துக்கு அருகே சென்றபோது ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்து புகை வந்ததை ரெயில் ஊழியர் ('கார்டு') பார்த்துள்ளார். உடனே ரெயிலை நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது. அப்போது பிரேக் பிணைப்பு மற்றும் பிரேக் பிளாக் உராய்வு காரணமாக புகை வந்தது தெரியவந்தது.

உடனடியாக அந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு ரெயில் 1.33 மணிக்கு மீண்டும் புறப்பட்டு சென்றதாக ரெயில்வே அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்