< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஓடும் ரெயிலில் திடீரென வந்த புகை; பயணிகள் அலறியடித்து ஓட்டம்
|27 Nov 2022 9:07 PM IST
பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ஹவுரா - துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீரென புகை வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு,
பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கி துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. ஆந்திரா மாநிலம் குப்பம் ரெயில் நிலையம் அருகே சென்ற போது ரெயில் பெட்டி ஒன்றில் இருந்து திடீரென புகை வெளியேறியது.
இதை கவனித்த ரெயில் இன்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். ரெயிலில் இருந்து வெளிவந்த புகையால் அச்சமடைந்த பயணிகள் அனைவரும் இறங்கி அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே ஊழியர்கள் ரெயிலை சோதனை செய்தனர். அதில் ரெயில் ப்ரேக் சிஸ்டம் ஜாம் ஆனதால் அதிக வெப்பம் ஏற்பட்டு புகை வந்துள்ளது தெரியவந்தது.
இந்த பிரச்சினையை உடனடியாக சரிசெய்யப்பட்டு, 3 மணி நேர தாமதத்திற்கு பிறகு ரெயில் மீண்டும் புறப்பட்டு சென்றது. இதில் பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.