< Back
தேசிய செய்திகள்
நடுவானில் விமானத்தில் சூழ்ந்த புகை...  அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
தேசிய செய்திகள்

நடுவானில் விமானத்தில் சூழ்ந்த புகை... அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தினத்தந்தி
|
3 July 2022 5:16 AM IST

டெல்லியில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூருக்கு நேற்று ஸ்பைஸ்ஜெட் நிறுவத்தின் பயணிகள் விமானம் புறப்பட்டது. சுமார் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, விமானி அறையின் அருகில் இருந்து புகை வெளியேறியதால், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து விமானம் உடனடியாக டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் பயணிகள் அனைவரையும் விமானத்தில் இருந்து விமான நிலைய அதிகாரிகள் பத்திரமாக வெளியேற்றினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்