< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பயிற்சியின்போது திடீர் கோளாறு... வயல்வெளியில் தரையிறங்கிய இந்திய ராணுவ விமானம்
|5 March 2024 12:38 PM IST
இந்திய ராணுவ பயிற்சி அகாடமிக்கு சொந்தமான விமானம் வயலில் மோதியபடி தரையிறங்கியதால் 2 பைலட்டுகள் காயமடைந்தனர்.
கயா:
பீகார் மாநிலம் கயா மாவட்டம், பார்பர் என்ற பகுதியில் ராணுவத்தின் சிறிய ரக விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வயலில் தரையிறங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று காலை 9.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்திய ராணுவ பயிற்சி அகாடமிக்கு சொந்தமான அந்த விமானத்தில் இருந்த பயிற்சி பைலட்டுகள் இரண்டு பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பயிற்சியின்போது விமானம் பழுதாகி அதிக சத்தம் எழுந்ததாகவும், கட்டுப்பாட்டை இழந்த விமானம் வயலில் மோதியபடி தரையிறங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.