< Back
தேசிய செய்திகள்
மாடியில் இருந்து தவறி விழுந்து   கட்டிட தொழிலாளி சாவு
தேசிய செய்திகள்

மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
2 Nov 2022 12:15 AM IST

மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலியானார்.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா கோகுல் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் அந்தப்பகுதியில் சொந்தமாக அடுக்குமாடி வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டில் மாடியில் தளம்போடும் வேலை நடந்து கொண்டிருந்தது. இந்த வேலையில் உப்பள்ளி தாலுகா பெங்கேரி பகுதியை சேர்ந்த முகமது தரபிக்முல்லா (வயது 35) என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்தார்.


இதில் அவர் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை, அங்கிருந்தவர்கள் உடனே மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி தரபிக்முல்லா உயிரிழந்தார். இதுகுறித்து கோகுல் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விிசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்