< Back
தேசிய செய்திகள்
மடிகேரியில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை
தேசிய செய்திகள்

மடிகேரியில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை

தினத்தந்தி
|
12 Sept 2023 12:15 AM IST

மடிகேரியில் குடும்ப பிரச்சினையில் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

குடகு-

மடிகேரியில் குடும்ப பிரச்சினையில் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

மேற்கு வங்க தம்பதி

மேற்கு வங்க மாநிலம் சார்முடி பஜாரை சேர்ந்தவர் ரோஷன் (வயது 28). இவரது மனைவி ராதிகா (34). இவர்கள் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி புறநகரில் உள்ள ரெசார்ட்டில் வேலை பார்த்து வந்தனர். மேலும் அவர்கள் ரெசார்ட் அருகே தங்கி இருந்தனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினமும் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரோஷன், தனது மனைவி ராதிகாவை சரமாரியாக அடித்து, உதைத்து தாக்கி உள்ளார்.

கழுத்தை அறுத்து கொலை

ஆனாலும் ஆத்திரம் தீராத அவர், வீட்டில் இருந்த வாளை எடுத்து ராதிகாவின் கழுத்தை அறுத்தார். இதில் பலத்த காயம் அடைந்த ராதிகா, சம்பவ இடத்திேலயே ரத்தவெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ரோஷன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து மடிகேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார் கொலையான ராதிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் கைது

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக ராதிகாவை அவரது கணவர் ரோஷன் வாளால் கழுத்தை அறுத்து படுகொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மடிகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ரோஷனை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்