< Back
தேசிய செய்திகள்
கழுத்தை அறுத்து விவசாயி படுகொலை
தேசிய செய்திகள்

கழுத்தை அறுத்து விவசாயி படுகொலை

தினத்தந்தி
|
27 July 2023 12:15 AM IST

கோலார் தாலுகாவில் கழுத்தை அறுத்து விவசாயி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

கோலார் தங்கவயல்:

விவசாயி படுகொலை

கோலார் (மாவட்டம்) தாலுகா பத்ரகோடிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணப்பா(வயது 55). விவசாயியான இவருக்கு கிராமத்தையொட்டி 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் அவர் நெல்,

தக்காளி, பூக்கள் ஆகியவற்றை சாகுபடி செய்து வந்தார். காலை மற்றும் மாலையில் ராமகிருஷ்ணப்பா தோட்டத்திற்கு செல்வ்தை வழக்கமாக கொண்டிருந்தார். அதுபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் வழக்கம்போல் தனது விளைநிலத்திற்கு சென்றார்.

அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. அவரை அவரது குடும்பத்தினரும்,உறவினர்களும் தேடிச்சென்றனர். ஆனால் அவர் விளைநிலத்தில் இல்லை. இந்த நிலையில் விளைநிலத்தின் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ராமகிருஷ்ணப்பா படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர் இதுபற்றி கோலார் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் ராமகிருஷ்ணப்பாவின் உடலை கைப்பற்றறி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்