< Back
தேசிய செய்திகள்
டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
தேசிய செய்திகள்

டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

தினத்தந்தி
|
5 May 2024 12:48 PM IST

சவாய் மாதோபூரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்றபோது, அவர்களின் கார் மீது மற்றொரு வாகனம் மோதியிருக்கிறது.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் இன்று, கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் பனாஸ் ஆற்றுப்பாலம் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில், காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போன்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் மீது மோதிய வாகனத்தின் உரிமையாளரை தேடி வருகின்றனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.,

இதுபற்றி காவல்துறை அதிகாரி கூறியதாவது:

அந்த குடும்பத்தினர் சவாய் மாதோபூரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்றபோது, அவர்களின் கார் மீது மற்றொரு வாகனம் மோதியிருக்கிறது. இதில், மணீஷ் சர்மா, அவரது மனைவி அனிதா, கைலாஷ் சர்மா, அவரது மனைவி சான்டோஷ், சதீஷ் சர்மா, அவரது மனைவி பூனம் ஆகியோர் உயிரிழந்தனர். சர்மாவின் குழந்தைகள் மனன், தீபாலி ஆகியோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் வந்த பின்பு, உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்