< Back
தேசிய செய்திகள்
கான்பூரில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
தேசிய செய்திகள்

கான்பூரில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

தினத்தந்தி
|
5 Feb 2024 4:06 PM IST

இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரை போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லக்னோ,

மத்தியப் பிரதேசத்தில் நடந்த ஒரு நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்ட ஒரு குடும்பம் காரில் இன்று அதிகாலை உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் உள்ள ஜெகநாத்பூர் கிராமத்திற்கு அருகே வந்து கொண்டிருந்தது. அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வடிநீர் கால்வாயில் விழுந்தது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 8 பேரில் 6 பேர் உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரில் படுகாயமடைந்த இருவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் விகாஸ் (40), அவரது மூத்த சகோதரர் சஞ்சு (45), குஷ்பு (17), கோலு (16), பிராச்சி (12), பிரதீக் (10) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் விராட் (15) மற்றும் வைஷ்ணவி (19) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்