நர்மதை நதியில் புனித நீராடிய 7 பேர் மாயம்.. தேடும் பணி தீவிரம்
|சூரத்தில் இருந்து வந்திருந்த 17 பேர் கொண்ட குழு நர்மதை நதியில் புனித நீராடியபோது 7 பேர் நீரில் மூழ்கியதாக காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவிதார்.
நர்மதா:
குஜராத்தின் நர்மதா மாவட்டம், பொய்ச்சா கிராமத்தில் உள்ள நர்மதை ஆற்றில் இன்று மதியம் சிலர் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் 7 பேர் ஆற்றில் மூழ்கி காணாமல் போனார்கள். உடனே அங்கிருந்த
உள்ளூர் நீச்சல் வீரர்கள் ஆற்றில் குதித்து தேட ஆரம்பித்தனர். தீயணைப்பு படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி நர்மதா நகர போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சூரத்தில் இருந்து வந்திருந்த 17 பேர் கொண்ட குழு ஒரு கோவிலில் பிரார்த்தனை செய்த பிறகு நர்மதை நதியில் புனித நீராடியபோது 7 பேர் நீரில் மூழ்கியதாக காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவிதார்.
6 சிறுவர்கள் மற்றும் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஆகிய 7 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுவதாகவும், தேடும் பணியில் ராஜ்பிப்லா நகரில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு படையினர் மற்றும் உள்ளூர் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.