< Back
தேசிய செய்திகள்
சிவமொக்கா மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக மிதுன்குமார் பதவியேற்பு
தேசிய செய்திகள்

சிவமொக்கா மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக மிதுன்குமார் பதவியேற்பு

தினத்தந்தி
|
6 Oct 2022 12:30 AM IST

சிவமொக்கா மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக மிதுன்குமார் பதவியேற்று கொண்டார்.

சிவமொக்கா;


சிவமொக்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த லட்சுமி பிரசாத், கடந்த சில தினங்களுக்கு முன்பு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து காலியாக இருந்த சிவமொக்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பதவிக்கு மிதுன்குமார் என்பவர் நியமிக்கப்பட்டார்.

அவர் பெங்களூரு சி.ஐ.டி. பிரிவில் துணை போலீஸ் கமிஷனராக இருந்தார். சிவமொக்கா மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்ட மிதுன்குமார், நேற்று சிவமொக்காவுக்கு வந்தார்.

சிவமொக்கா போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த அவர், தனது பதவியை ஏற்றுக்கொண்டார். அவரிடம் பொறுப்பை ஒப்படைத்த லட்சுமி பிரசாத், அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் செய்திகள்