< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து - ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்
|9 May 2024 10:00 PM IST
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 10 ஆக அதிகரித்துள்ளது. இதில் 5 பேர் பெண்கள் ஆவர்.
இந்நிலையில் இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழகத்தின் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் உயிரிழந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.