< Back
தேசிய செய்திகள்

கோப்புப்படம்
தேசிய செய்திகள்
சகோதரனுடன் சண்டையிடும் போது செல்போனை விழுங்கிய சகோதரி - 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அகற்றம்

6 April 2023 2:26 PM IST
சகோதரனுடன் சண்டையிடும் போது சகோதரி செல்போனை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
சகோதரனுடன் ஏற்பட்ட சண்டையின் போது 18 வயது சிறுமி செல்போனை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
சிறுமி செல்போனை விழுங்கியதும் அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை சிறுமி குவாலியரில் உள்ள ஜெய்ரோக்யா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிறுமிக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சுமார் இரண்டு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுமியின் வயிற்றில் இருந்து செல்போன் அகற்றப்பட்டது. தற்போது சிறுமியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை கேட்டதும் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்ததாகவும், இது போன்ற சம்பவங்கள் அரிதானது என்றும் தெரிவித்துள்ளனர்.