< Back
தேசிய செய்திகள்
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது இந்தியாவுக்கு சிறந்த தொடக்கம் - பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது இந்தியாவுக்கு சிறந்த தொடக்கம் - பிரதமர் மோடி

தினத்தந்தி
|
30 July 2022 5:06 PM IST

காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சங்கெத் சர்காருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் சங்கெத் மகாதேவ் சர்கார் பங்கேற்றார்.

55 கிலோ பளு தூக்கும் பிரிவில் கலந்துகொண்ட அவர், மொத்தம் 248 கிலோ தூக்கி இரண்டாவது இடத்தை பிடித்து இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்துள்ளார். இந்த நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள சங்கெத் மகாதேவ் சர்காருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "சங்கேத் சர்காரின் சிறப்பான முயற்சி! காமன்வெல்த் போட்டியில் மதிப்புமிக்க வெள்ளிப் பதக்கத்தை அவர் வென்றிருப்பது இந்தியாவுக்கு ஒரு சிறந்த தொடக்கமாகும். அவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து எதிர்கால முயற்சியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்