< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கொலை செய்யப்பட்ட பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா குடும்பத்தினருடன் அமித்ஷா சந்திப்பு..!
|4 Jun 2022 7:33 PM IST
சுட்டுக்கொல்லப்பட்ட பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா குடும்பத்தினரை உள்துறை மந்திரி அமித்ஷா சந்தித்தார்.
சண்டிகர்,
பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் கடந்த 29-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார், இந்த கொலைச் சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று பஞ்சாப் முதல்-மந்திாி பகவந்த் மான், சித்து மூஸ்வாலாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தொிவித்தாா். இதற்கு உள்ளூர் மக்கள் எதிா்ப்பு தொிவித்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இன்று சண்டிகரில் பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் குடும்பத்தினரை சந்தித்தார். அவருடைய குடும்பத்தினருக்கு அமித்ஷா ஆறுதல் தெரிவித்தார்.