< Back
தேசிய செய்திகள்
அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு சென்ற சித்தராமையா
தேசிய செய்திகள்

அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு சென்ற சித்தராமையா

தினத்தந்தி
|
21 Aug 2022 8:55 PM IST

சித்தராமையா, அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

குடகு:

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா தற்போது பெரும் விவாத பொருளாக மாறி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்தராமையா குடகு மாவட்டத்திற்கு சென்றார். அவர் குடகு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். மேலும் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில் அவர் கோழிக்கறி குழம்புடன் அசைவ உணவு சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன.

குடகு மாவட்டம் மடிகேரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மதியம் அசைவ விருந்து சாப்பிட்ட சித்தராமையா, பின்னர் கொட்லிபேட்டேவில் உள்ள பசவேஸ்வரா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இதைப்பார்த்த பா.ஜனதாவினர் மற்றும் இந்து அமைப்பினர் சித்தராமையாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்