< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தனக்கு இடையூறு ஏற்படுத்தியவரை அடிக்க கை ஓங்கிய சித்தராமையா
|27 Jan 2024 5:56 AM IST
கேள்வி கேட்டபடி இருந்த நபரை சித்தராமையா அடிக்க கையை ஓங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூரு,
பெங்களூரு மெஜஸ்டிக் கோடே சர்க்கிளில் உள்ள சங்கொள்ளி ராயண்ணாவின் சிலைக்கு அவரது நினைவுநாளையொட்டி முதல்-மந்திரி சித்தராமையா நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அந்த சமயத்தில் அவரது பின்னால் நின்றிருந்த ஒருவர் சித்தராமையா, சங்கொள்ளி ராயண்ணா சிலைக்கு பூக்கள் தூவிய போதும், அதன் பிறகும் தொடர்ந்து ஏதோ பேச முயன்றார். பூ தூவி முடித்ததும் சித்தராமையா என்ன என கேட்டார். அதற்கு அந்த நபர் ஏதோ பதில் கூறினார். இதையடுத்து சித்தராமையா அங்கிருந்து புறப்பட முயன்றார். தொடர்ந்து அந்த நபர் சித்தராமையாவிடம் ஏதோ கேள்வி கேட்டபடி இருந்தார். இதனால் திடீரென கோபமடைந்த சித்தராமையா, அந்த நபரை நோக்கி அடிக்க கையை ஓங்கினார். உடனே அருகில் இருந்தவர்கள் அந்த நபரை அங்கிருந்து பிடித்து வெளியே தள்ளிவிட்டனர்.