< Back
தேசிய செய்திகள்
சித்தராமையாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு
தேசிய செய்திகள்

சித்தராமையாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு

தினத்தந்தி
|
12 May 2023 6:45 PM GMT

சித்தராமையாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா சட்டசபை தேர்தலையொட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது அவருக்கு கை வலி உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தது. இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிந்தது. ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில் அவர் மைசூருவில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பினார். எதிர்க்கட்சி தலைவரான அவர் பெங்களூருவில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு இல்லத்தில் குடும்பத்துடன் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலையில் அவர் மிகவும் உடல் சோர்வுடன் காணப்பட்டார். மதியம் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள அவரது குடும்ப டாக்டர் ரவிக்குமாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சித்தராமையாவின் வீட்டுக்கு மருத்துவக்குழுவினருடன் டாக்டர் ரவிக்குமார் சென்றார். மேலும் அவர் சித்தராமையாவுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கினார்.

இதுபற்றி நிருபர்களிடம் டாக்டர் ரவிக்குமார் கூறுகையில், 'சித்தராமையாவின் இடது கை வீங்கி உள்ளது. வலி காரணமாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது கை வீக்கம் கொஞ்சம் குறைந்துள்ளது. அவர் பூரண குணமடைய இன்னும் சில நாட்கள் ஆகும். அதனால் 2 வாரம் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறேன். மற்றபடி சித்தராமையா ஆரோக்கியமாக உள்ளார்' என்று கூறினார்.

மேலும் செய்திகள்