< Back
தேசிய செய்திகள்
சட்டசபை தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியிட திட்டமா?; சித்தராமையா பரபரப்பு பேட்டி
தேசிய செய்திகள்

சட்டசபை தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியிட திட்டமா?; சித்தராமையா பரபரப்பு பேட்டி

தினத்தந்தி
|
7 Nov 2022 9:40 PM GMT

சட்டசபை தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியிட திட்டமா? என்பது குறித்து சித்தராமையா பதிலளித்துள்ளார்.

பெலகாவி:

சட்டசபை தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியிட திட்டமா? என்பது குறித்து சித்தராமையா பதிலளித்துள்ளார்.

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

செல்ல முடியவில்லை

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாதாமி தொகுதியில் மீண்டும் போட்டியிடுமாறு அந்த தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்துகிறார்கள். எனது வீட்டின் முன்பு அமர்ந்து போராடுவதாக அந்த தொகுதி பெண்கள் கூறியுள்ளனர். என்னால் வாரம் ஒருமுறை கூட பாதாமி தொகுதிக்கு செல்ல முடியவில்லை. வாரம் ஒருமுறை வர முடியாவிட்டாலும் பரவாயில்லை, பாதாமி தொகுதியிலேயே போட்டியிட வேண்டும் என்று அவர்கள் கூறலாம். ஆனால் எனது மனது அதை ஏற்கவில்லை.நான் பாதாமி தொகுதிக்கு சென்று 2 மாதங்கள் ஆகிவிட்டது. நாளை(இன்று) பாதாமிக்கு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். ஆனால் ஒரு அவசர வேலை காரணமாக அங்கு செல்ல முடியவில்லை. கோலார் தொகுதியில் போட்டியிடுமாறு அழைக்கிறார்கள். வருணா தொகுதியிலேயே போட்டியிட வேண்டும் என்று எனது மகன் யதீந்திரா கூறுகிறார்.

கட்சி முடிவு செய்யும்

சாம்ராஜ்பேட்டையில் போட்டியிடுங்கள் என்று அந்த தொகுதி எம்.எல்.ஏ.வான ஜமீர்அகமதுகான் அழைக்கிறார். இவ்வாறு பல்வேறு தொகுதிகளில் இருந்து எனக்கு அழைப்பு விடுகிறார்கள். எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து வரும் நாட்களில் முடிவு செய்வேன். அமித்ஷா முன்பு குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறையில் இருக்கவில்லையா?. கொலை குற்றச்சாட்டு இருந்த பலர் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகி இருக்கிறார்கள்.

ஒருவர் குற்றவாளி என்று கோர்ட்டால் அறிவிக்கப்படும் வரை அவர் நிரபராதியே. குற்றம்சாட்டப்பட்டவர் தவறு செய்தவர் அல்ல என்று சட்டம் சொல்கிறது. நான் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை எங்கள் கட்சி முடிவு செய்யும். சித்ரதுர்கா முருகா மடாதிபதி மீதான பாலியல் வழக்கு விவகாரம் கோர்ட்டில் உள்ளது. அதனால் அதுபற்றி நான் கருத்து கூற மாட்டேன்.

10 சதவீத இட ஒதுக்கீடு

முன்னேறிய சமூகங்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு மத்திய அரசு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதுகுறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று(நேற்று) தீர்ப்பு கூறியுள்ளது. 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் அந்த முடிவுக்கு ஆதரவாகவும், 2 நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பு அளித்துள்ளனர். இந்த அரசியல் சாசனப்படி பின்தங்கிய சமூகங்களுக்கு மட்டுமே கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

பிரதமர் மோடி, 40 சதவீத கமிஷன் பா.ஜனதா அரசு மீது என்ன நடவடிக்கை எடுத்தார்?. சட்டசபை தேர்தலுக்கு முன்பு பா.ஜனதா வழங்கிய வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்